Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதன்முறையாக புதுமுகநடிகரின் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல்படத்திலிருந்தே அவருக்கு ஏறுமுகம்தான். அடுத்தடுத்து குறிப்பிடத்தகுந்த முக்கியமான படங்களுக்கு இசையமைத்ததோடு விஜய், அஜித் போன்ற முன்னணிநாயகர்கள் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

இப்போது முதன்முறையாக ஒருபுதுமுகநடிகர் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். வேலையில்லாப்பட்டதாரி படத்தில் தனுஷ் தம்பியாக நடித்தவர் ஹிரிஷிகேஷ். இவர் அனிருத்தின் உறவினராம். அவர் இப்போது ஒருபடத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

“ரம்” என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தப்படத்தை சாய்பரத் என்பவர் இயக்குகிறாராம். இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முதன்முறையாக ஒரு புதுமுகநடிகரின் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close