Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கபாலி படத்தின் அதிகப்படியான காட்சிகள் மலேசியாவில் படப்பிடிப்பு?

ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்திற்கான முதல் பாதி ஷூட்டிங் சென்னையில் நடந்துமுடிந்ததைத் தொடர்ந்து, மொத்த டீமும் மலேசியாவில் முகாமிட்டிருக்கிறது.

ஒரு மாதம் முழுவதும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். கபாலி படத்திற்கான 75 சதவிகித காட்சிகள் மலேசியாவின் சில்லாங் மற்றும் மலாகா பகுதியில் தான் நடைபெறவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக சிறப்பு அனுமதியுடன் மலேசியாவில் பிஸியாக ஷூட்டிங் வேலையில் இருக்கிறது கபாலி குழு.

கேங்ஸ்டராக ரஜினி நடிக்கும் இப்படத்தில் ராதிகா ஆப்தே ரஜினியின் மனைவியாகவும், தன்ஷிகா மகளாகவும் நடிக்கிறார்கள். மெட்ராஸ் ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் ரித்விகா எதிர்நாயகியாக நடிக்கிறார். கபாலி பட தயாரிப்பாளர் தாணு இப்படத்தை 2016 கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுவருகிறாராம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close