Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விக்ரம் படஇயக்குநர் மாற்றமா?

 சில ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட்ட கரிகாலன் படம் வளராமல் நின்றுபோனது. அந்தப்படத்தைத் தயாரித்த நிறுவனத்துக்கு இப்போது ஒருபடம் நடிக்கவிருக்கிறாராம் விக்ரம்.

 

அரிமாநம்பி படஇயக்குநர் ஆனந்த்சங்கர் படத்தைத் தொடர்ந்து அந்தப்படம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தை இயக்கப்போவது யார்? என்பது தெரியாமல் இருந்தது. பத்துஎண்றதுக்குள்ள படத்தைத் தொடர்ந்து விஜய்மில்டனே மீண்டும் விக்ரமை இயக்குவார் என்கிற பேச்சு இருந்தது. இப்போது அதில் மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

சசிகுமார் நடிப்பில் பிரம்மா படத்தை இயக்கிய சாக்ரடீஸ் சொன்ன கதை விக்ரமுக்குப் பிடித்திருந்ததாம். எனவே அவரையே இயக்குநராக வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறாராம். தயாரிப்புநிறுவனமும் அதை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

எனினும் விக்ரம் இப்போது வெளிநாடு சென்றிருப்பதாகவும் அவர் திரும்பிவந்த பின்புதான் உறுதியாகும் என்றும் சொல்கிறார்கன்.    

 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்