Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்திரன் 2 படத்தினால் எமிக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!

இந்த வருடம் எமி ஜாக்சனுக்கு அதிர்ஷ்டமான வருடம் என்றே தோன்றுகிறது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் எமி தொடர்ந்து இந்தியிலும் பல பெரிய ஹீரோக்கள், நடிகர்கள் படத்தில் ஒப்பந்தமாகி வருகிறார்.

மதராசப்பட்டினம் படம் மூலம் சினிமாவிற்குள் வந்த எமி ஜாக்சன் லண்டன் பொண்ணு. தொடர்ச்சியாக ஏக் திவானா தா படம் மூலம் இந்தியிலும் கால் பதித்தார். பின்னர் தாண்டவம், எவ்வடு என மொழி வாரியாக நடித்தவர் யாரும் எதிர்பாரா வண்ணம் ஷங்கரின் ஐ பட நாயகியாகி அடுத்த கட்டம் தொட்டார். அடுத்து ’சிங் ஈஸ் ப்ளிங்’ படம் மூலம் இந்தியில் அக்‌ஷய் குமாருக்கு நாயகி. தற்சமயம் தனுஷுடன் தங்கமகன், உதயநிதி ஸ்டாலினுடன் கெத்து, விஜய்யின் 59வது படம் என பிசியான எமிக்கு ரஜினியின் நாயகியாக ஷங்கரின் எந்திரன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இப்போது புதிய செய்தியாக எமி ஜாக்சன் பாலிவுட்டில் நடிப்புக்காக தேசிய விருது பெற்ற நவாசுதின் சித்திக்குடன் ஜோடியாக நடிக்கவிருக்கிறார். மேலும் இந்தப்படத்தை இயக்க இருக்கிறார் பிரபல இயக்குநர் சோஹைல் கான். உண்மையாக நடந்த மிகப்பெரிய சர்ச்சைக்குரிய சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறது. இந்த வாய்ப்புகள் கண்டிப்பாக முன்னணி நாயகிகளுக்குக் கூட தற்சமயம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். எந்திரன் 2 படத்தில் ஒப்பந்தமானாலும் ஆனார் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் எமி வீட்டுக் கதவைத் தட்ட ஆரம்பித்துவிட்டன என்றே சொல்லவேண்டும். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close