Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேதாளம் படத்தை ஒட்டுமொத்தமாக வாங்கியது சர்ச்சைக்குரிய நிறுவனம்?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வேதாளம் படம் தீபாவளி தினத்தில் வெளியாகவிருக்கிறது. அந்தப்படம் இதுவரை அஜித் படங்களுக்கு இல்லாத அளவு பெரியவியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தின் சென்னை வெளியீட்டுஉரிமையை தற்போது சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் ஜாஸ் சினிமாஸ் வாங்கியிருப்பதாகச் சொல்லப்பட்டது. செங்கல்பட்டு விநியோகஉரிமையை ரெட்கார்ப்பெட் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கோவைப்பகுதிக்கு சர்வம்சினிமாஸ், வட,தென்ஆற்காடு பகுதிகளில் பாண்டிசுரேஷ், டிடி பகுதிக்கு எஸ்.பி.சுப்பையா, சேலத்துக்கு 7ஜிபிலிம்ஸ்சிவா, டிகேவுக்கு சேகர் என்றும் செய்திகள் வந்தன.

தொடக்கத்தில் சென்னை வெளியீட்டுஉரிமையை மட்டும் வைத்திருந்த ஜாஸ்சினிமாஸ் இப்போது ஒட்டுமொத்த தமிழகஉரிமையையும் வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதேசமயம், மற்ற பகுதிகளுக்கு உரிமை வாங்கியவர்கள் விசயத்தில் எந்த மாற்றமும் இருக்காதென்றும் அவர்கள் ஜாஸ் சினிமாஸோடு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஜாஸ்சினிமாஸ் நிறுவனம் பற்றி பரபரப்பான சர்ச்சைகள் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு மாற்றம் நடந்திருப்பது திரையுலகில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close