Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய்சேதுபதிக்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா , மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் இறைவி. கொஞ்சம் வித்தியாசமாக உருவாகிவரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

இந்தப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறாராம். மேலும் அவர் தோற்றமும் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தனித்தன்மையான இவரது கேரக்டர் வில்லன் ரோலுக்கு இன்னும் சரியாக பொருந்தும் என்கிறது படத்திற்கு நெருங்கிய வட்டாரம்.

வில்லனாக முதல் முறையாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக வேட்டையாடு விளையாடு கமாலினி முகர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்