Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷால் ஜோடி லட்சுமிமேனனா? ஸ்ரீதிவ்யாவா?

குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களை இயக்கி முத்தையா, அவற்றைத் தொடர்ந்து விஷால் கதாநாயகனாக நடிக்கும் மருது என்கிற படத்தை இயக்கவிருக்கிறார். அப்படத்தில் விஷால் ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

 

இயக்குநர் முத்தையாவின் முந்தைய இருபடங்களிலும் அவர்தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்துக்கும் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முத்தையா சொன்னதாகவும், நாயகன் விஷாலுடன் லட்சுமிமேனன் ஏற்கெனவே இரண்டுபடங்களில் நடித்திருக்கிறார் என்பதால் அவரும் ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது.  

இப்போது திடீரென, அந்தப்படத்தில் நாயகியாக லட்சுமிமேனன் நடிக்கவில்லை ஸ்ரீதிவ்யா நடிக்கிறார் என்று செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. இதுபற்றி, இயக்குநர் முத்தையாவின். டிவிட்டர்பக்கத்தில், ஸ்ரீதிவ்யா இல்லை லட்சுமிமேனன்தான் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆனால் படத்தில் ஸ்ரீதிவ்யாதான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். இயக்குநர் முத்தையா, நான் டிவிட்டரிலேயே இல்லை, எனக்கு அதெல்லாம் பிடிக்காது என்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close