Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதன்முறையாக ரஜினி கமலுக்கு தீபாவளி பரிசு தருகிறது நடிகர்சங்கம் !

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாக பொறுபேற்றுள்ள தலைமை, வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களான ரஜினி, கமல் உட்பட மொத்தம் 3,500 நபர்களுக்கும் விழாக்கால பரிசாக ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் இதனுடன் உறுப்பினர்களுக்கு ஒரு பை இனிப்பும் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பரிசுப் பொருட்கள் அனைத்தும் உறுப்பினர்களின் வீட்டிற்கே சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம். அதோடு, நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்கள் பற்றிய விவரம் அறியும் கணக்கெடுப்பு விரைவில் துவங்கவுள்ளதாகச் சொல்கிறார்கள்.

நடிகர் சங்கத்தில் உள்ள  நிர்வாகிகள்  பத்துப் பேர் தனி குழுக்களாக மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு ,எல்லா மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள நாடக நடிகர்களை நடிகைகளை அவர்களுடைய வீட்டிற்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் பற்றியும் ,வருமானம் மற்றும் அவர்களது தற்போதைய நிலை , செய்யும் தொழில் போன்றவைகளை நேர்த்தியாக கணக்கெடுத்து தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.  அதற்கான பணி  தீபாவளி பண்டிகைக்குப்  பின் துவங்கி, முதற்கட்ட வேலையாக செய்துமுடிக்கப்படவுள்ளதாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close