Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலுடன் மோதலில் இந்தமுறையாவது அஜித் ஜெயிப்பாரா?

இந்த தீபாவளிக்கு,கமலின் தூங்காவனம், அஜித்தின் வேதாளம் என  இரண்டு பெரிய படங்கள்  ரிலீஸ். ரசிகர்கள் பலரும் இரண்டில் எந்தப் படம் பெஸ்ட் என்ற முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.  கமல் படத்துடன் அஜித் படம் ஒரே நேரத்தில் சந்திப்பது இது நான்காவது முறை. முதன்முதலில் 1994ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் 2ம் தேதி நம்மவர் படம் வெளியானது அதே நாளில் அஜித்தின் பவித்ரா படம் வெளியானது.

இதில் பவித்ரா படம் சரியாக போகவில்லை. மேலும் நம்மவர் வெற்றியடைந்தது. கதையும் வெகுவான பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஆஸ்கர் பரிந்துரைப்பட்டியலில் இணைந்த ஹேராம் படம் வெளியான அதே நாளில் அஜித்தின் முகவரி வெளியானது.முகவரி தோல்வி இல்லை என்றாலும் ஹேராம் அளவிற்கு மிகப்பெரிய பாராட்டுகளையோ அல்லது விருதுகள் அளவிற்கு பெரிதாகப் போகவில்லை.

எல்லாவற்றிற்கும் மேல் அஜித்தின் மாஸ் , அல்லது நடிப்பிற்கான சிரத்தையோ பெரிதாக இல்லாத படம் எனலாம்.

அடுத்து பம்மல் கே.சம்மந்தம் வெளியான போது அஜித்தின் ரெட் படம் வெளியானது. இவ்விரண்டு படங்களும் பொங்கல் வெளியீடாக 14 ஜனவரி 2002ல் வெளியான படங்கள். இதில் பம்மல் கே சம்மந்தம் காமெடி படம். அந்தப்படத்தின் வசூலுடனும், வரவேற்புடனும் ஒப்பிடுகையில் ரெட் அந்த அளவிற்குப் போகவில்லை.

இந்நிலையில் இப்போது மீண்டும் 13 வருடங்கள் கழித்து இரண்டு நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் சந்திக்கின்றன. இதுவரை கமலுடன் மோதலில் அஜித் படங்கள் மூன்றும் பெரிதாகப் போகாத நிலையில் அந்தப் பெயரை வேதாளம் மாற்றுமா என்பது வருகிற நவம்பர் 10ம் தேதி தெரிந்துவிடும்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close