Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிக்காக எதையும் இழப்போம்..எதற்காகவும் ரஜினியை இழக்க மாட்டோம்...இது தலைவர் படம்!

மும்பை: ரஜினி மற்றும் ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படமே ’ஃபார் தி லவ் ஆஃப் எ மேன்’. இயக்குநர் ரின்கு கால்சி படைப்பில் உருவாகியுள்ள இப்படம் மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தை ஏன் ரசிகர்கள் இப்படிக் கொண்டாடுகிறார்கள். கடவுளுக்கு நிகராக அவர் மதிக்கப்படக் காரணம் என அவரின் ரசிகர்களே சொல்லும்படியாக அந்த ஆவணப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் விரைவில் ரஜினிகாந்துக்குப் படத்தைப் போட்டுக்காட்டவிருக்கிறார் இயக்குநர் ரின்கு கால்சி.

அவர் பேசுகையில், நான் ஓரிரு தினங்களுக்கு முன்பு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷை சந்தித்தேன். நாங்கள் படம் குறித்து அறிந்தோம். இந்தப் படம் பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளார். எனவே விரைவில் படம் குறித்து ரஜினிகாந்தின் கருத்துகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியானது, அதில் ரசிகர்கள் ரஜினிகாந்த் படம் வெளியாகும் போது செய்யும் சடங்குகள், பூஜைகள், ரஜினி பட நாளில் அவர் போல் கெட்டப் போட்டு செல்வது, என ரசிகர்களின் சிறப்பாக பல விஷயங்கள் இடம்பிடித்துள்ளன. அதிலும் ஒரு ரசிகர் பேசுகையில் ‘ரஜினிக்காக எதையும் இழப்போம், எதற்காகவும் ரஜினியை இழக்க மாட்டோம் என கூறி நெகிழ்ந்துள்ளார்.

90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் மும்பை மாமி திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. விரைவில் ரசிகர்கள் பார்வைக்கும் கொண்டுவரப்படும் எனச் சொல்லப்படுகிறது. 

முன்னோட்டம்: 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close