Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

26 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் நடிக்கும் நடிகை

   தூங்காவனம் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் புதியபடத்தை மலையாள இயக்குநர் டி,கே,சஞ்சீவ்குமார் இயக்கவிருக்கிறார். அந்தப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தில் கமலுடன் அமலா நடிக்கவிருக்கிறாராம். 1986 ஆம் ஆண்டு டி,ராஜேந்தரின் மைதிலிஎன்னைக்காதலி படத்தின் மூலம் அறிமுகமான அமலா, அதைத்தொடர்ந்து கமல், ரஜினி உள்ளிட்ட எல்லா முன்னணிநடிககர்களோடும் நடித்தார். 91 ஆம் ஆண்டுவரை நடித்துக்கொண்டிருந்தவர், 92 இல் நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்டு திரையுலகைவிட்டு ஒதுங்கியிருந்தார்.

கடந்தஆண்டு தமிழ் தொலைக்காட்சித்தொடர் ஒன்றில் நடித்தார். இப்போது அவருடைய மகன் அகில் கதாநாயகனாக நடிக்கத்தொடங்கிவிட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் கமல் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது முக்கியமான செய்தியாகிவிட்டது. ஏற்கெனவே கமலுடன் பேசும்படம், சத்யா, வெற்றிவிழா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள்.    

 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close