Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகார்த்திகேயனுடன் இணைந்த விக்னேஷ்சிவன்

 புதுஇயக்குநர் பாக்யராஜ்கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நவம்பர் இரண்டாம்தேதி தொடங்கியது. படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் பாடல்காட்சியைத்தான் இப்போது படமாக்கிக்கொண்டிருக்கிறார்களாம்.

பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி அரங்கில் பெரும்பொருட்செலவில் பெரியஅரங்கு அமைத்து அந்தப்பாடலைப் படமாக்கிக்கொண்டிருக்கிறார்களாம். அந்த அரங்கைத் தொடர்ந்து சென்னை மெட்ரோரயிலில் பாடல்காட்சி படமாகவிருக்கிறதாம்.

ராஜூசுந்தரம் நடனஅமைப்புச் செய்ய பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்கிறார். இந்தப்பாடலில் சிவகார்த்திகேயனும் கீர்த்திசுரேஷூம் நடனமாடுகிறார்கள். அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்பாடலை எழுதியிருப்பவர் நானும்ரவுடிதான் இயக்குநர் விக்னேஷ்சிவன்தானாம். படத்தின் நல்லதொடக்கத்துக்கேற்ப வரிகளைக் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். 

 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close