Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியின் கபாலி படப்பிடிப்புக்குச் சிக்கல்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா அப்தே, தன்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் கபாலி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டிற்கே ட்ரெண்டை உருவாக்கி கொண்டாடினர் ரஜினி ரசிகர்கள்.

இந்நிலையில் படத்தின் 20 சதவீத காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காக தற்போது ரஜினி, பா,ரஞ்சித் உள்ளிட்டோர் மலேசியாவிற்கு சென்றுள்ளனர்.

 எப்போதும் ரஜினி படங்களின் படப்பிடிப்பு மற்றும் இதரவேலைகள் கொஞ்சம் ரகசியமாகவே  நடைபெறும். இந்தப் படத்தின் வேலைகளை அப்படி ரகசியம் காக்க நினைத்தும் அது முடியாமல் போகவே தற்போது ரஜினியே தான் கபாலி படப்பிடிப்பிற்காக மலேசியா செல்வதாக தன் மகளுடன் செல்ஃபி எடுத்து வெளியிட ரஜினி மலேசியாவிற்கு கிளம்பியதில் இருந்து  எங்கு சென்றாலும் கூட்டம் கூடிவிடுகிறதாம்.

இந்த ரசிகர்கள் கூட்டத்தால் படப்பிடிப்புத் தளத்திலும் கூட்டம் கூடிவிடுகிறதாம். இதனால் படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அது சரி  ரஜினிகாந்த் ஓரிடத்திற்கு வருகிறார் என்றால் அங்கே கூட்டம் இல்லாமல் இருந்தால் தானே ஆச்சர்யம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close