Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷாலுக்குக் கிடைத்த போனஸ்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து இன்னும் திரைக்கு வராத படம் “மதகஜராஜா”. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி, அஞ்சலி மற்றும் சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மதகஜராஜா படத்திற்குப் பிறகு சுந்தர்.சி - விஷால் கூட்டணியில் 'ஆம்பள' படமும் வெளியானது. ஆனால் 'மதகஜராஜா' வெளியீடு குறித்து இருவரிடம் கேள்வி எழுப்பினால், "அது தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்" என்று பதிலளித்தார்கள்.

மதகஜராஜா படத்தை ஜெமினி ஃபிலிம் சர்யூட் நிறுவனம் தயாரித்தது. முன்னர் கடல் படத்தை விநியோகம் செய்ததில் நஷ்டம் ஏற்பட்டதால் இப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. விஷால் இப்படத்தை வாங்கி வெளியிட முன்வந்தார்.  அந்த நேரத்தில் 'கடல்' படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் பிரச்சினை பண்ணவே, பட வெளியீட்டை கைவிட்டார் விஷால்.

தற்பொழுது ஜெமினி சர்க்யூட் நிறுவனம் பிரச்னைகள் தீர்ந்து, மதகஜராஜா படத்தை வெளியிட தயாராகிவிட்டனராம். டிசம்பர் மாதம் 11ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

படத்தை முன்பே வெளியிட முயற்சி எடுத்து அது தோல்வியுற்றதால், இந்தப்படத்தை மறந்துவிட்டு மற்ற படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் விஷால். இப்போது இந்தப்படம் வெளியாவது, அவருக்கு போனஸ் என்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close