Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர்சங்கத்தில் கமலைத் தொடர்ந்து எஸ்.வி.சேகருக்கும் பொறுப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் அக்டோபர் 25-ந் தேதி சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன் நடிகர் சங்க அறக்கட்டளையின் உறுப்பினர்களாக கமல்ஹாசன், நாசர், விஷால், கார்த்தி ஆகியோரை நியமித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.  நடிகர் சங்கத்தின் செயற்குழு இரண்டாவது தடவையாக நேற்று (நவம்பர் 4 )மீண்டும் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்கு விவரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாம். நடிகர் சூர்யா கொடுத்த ரூ.10 லட்சம்  தொகையை வைத்து தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரில் புதிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் நடிகர் சங்கத்தின் புதிய அறங்காவலர்களாக எஸ்.வி.சேகர், ராஜேஷ், ஐசரி கணேஷ், பூச்சி முருகன், குட்டி பத்மினி ஆகிய மேலும் 5 பேரை நியமனம் செய்து செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

ஏற்கெனவே  கமல், நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் அறங்காவலர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும்  சேர்த்து நடிகர் சங்க அறக்கட்டளைக்கு மொத்தம் 9 பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலுக்குக் காரணமாக இருந்தவர் என்று சொல்லப்பட்ட பூச்சிமுருகன், தேர்தல்நேரத்தில் இந்த அணி சார்பாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட எஸ்.வி.சேகர் உள்ளிட்டோருக்கும் அறங்காவலர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம், தேர்தல்நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய மாதிரியும் ஆச்சு, ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்திய மாதிரியும் ஆச்சு என்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close