Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஞ்சலிக்கு ஏறுமுகமாக அமையுமா இறைவி?

த்ரில்லர் 'பீட்சா’, கிரைம் 'ஜிகர்தண்டா’ என ஹிட்ஸ் தந்த கார்த்திக் சுப்புராஜ், இப்போது 'இறைவி’ என, தலைப்பிலேயே சுவாரஸ்யம் சேர்க்கிறார்.

விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா,அஞ்சலி, கருணாகரன்,கமாலினி முகர்ஜிஎன செம ஸ்டார் காஸ்ட்டிங்கில் கொஞ்சம் வித்தியாசமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் எஸ்ஜேசூர்யா வில்லனாக நடிக்கிறார். மேலும் அவரின் தோற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் என்கிறது படக்குழு. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ஸ்கோர் செய்ய உள்ள இந்தப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

ஒரு குடும்பத்தில், பெண்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்தப் படம் இருக்கும் எனச் சொல்லப்பட்டு வந்தது. அப்படியில்லை இறைவி ஒரு க்ரைம் த்ரில்லராக மர்மமான முறையில் நடக்கும் கொலையும் அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளைச் சுற்றி படம் சுழல்வதாகவும் செய்திகள் உள்ளன.


சித்தியுடன் தகராறு, தலைமறைவு...எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சறுக்கிய அஞ்சலியின் சினிமா வாழ்க்கை, தற்போது ஏறுமுகத்தில். நிச்சயமாக அஞ்சலிக்கு இந்தப்படம் பேக் டு தி ஃபார்மாக இருக்கும்.

இறைவி படம் இன்னும் வெளியாகாத நிலையில் அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பெயரிடப்படாத அடுத்த படத்தின் ஸ்கிரிபட் வேலைகளையும் சைலன்ட்டாக முடித்து விட்டார். அநேகமாக தமிழ்த்திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 - சுசித்ரா சீத்தாராமன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close