Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தளபதி மாதிரி படம் பண்ணிட்டு அடுத்த ரஜினின்னு சொல்லுங்க- ரஜினிரசிகர்கள் அதகளம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்த் திரை வரலாற்றிலும் பெரும் வெற்றியை கொடுத்த படம் "தளபதி".

கர்ணனுக்கும், துரியோதனனுக்கும் இடையிலான நட்பை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது படம் இந்தப்  படம். அன்று ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்த ரஜினி படத்தின் கதைக்காக  தன் இமேஜை பெரிய அளவில் விட்டுக்கொடுத்து நடித்த படம் என சொல்லப்பட்டது.

காதலித்த பெண்ணை, மனதுக்குள் வலித்தாலும்  "ஜஸ்ட் லைக் தட்"  விட்டுக்கொடுப்பது, தன்னால்  விதவையான  பெண்ணைத் திருமணம் செய்வது எனப் பலவாறு இறங்கி நடித்திருந்தார் ரஜினி.

படம்  வெளியானவுடன்  மம்முட்டி என்கிற நடிப்பு அசுரனையே வெள்ளந்தியும்,முரட்டுத்தனமுமான தனது பாத்திரத்தின் மூலம் தூக்கிச்  சாப்பிட்டிருந்தார்.   "ரஜினி என்கிற சிங்கத்தை சின்னக்கூண்டில் அடைத்து வைத்திருந்தோம். தளபதியின் மூலம் அது வெளிவந்துள்ளது" என ஆனந்த விகடன் தனது விமர்சனத்தில் பாராட்டியது.

அந்த தளபதி வெளியாகி நேற்றுடன் 24 ஆண்டு நிறைவானதையொட்டி  டிவிட்டரில் ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கினார்கள். அதில் வெளியான சில 'அட' டிவிட்டுகள்.

'தளபதி' படத்திற்கு எந்தளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு 'கபாலி'க்கும் இருப்பதுதான் ரஜினி "காந்தம்" .

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close