Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேதாளம் டிரெயிலர் வெளியாகாதது எதனால்?

  அஜித்தின் வேதாளம் படம் தொடங்கியது ஒரு வியாழக்கிழமை. அப்போதிருந்து அந்தப்படம் தொடர்பான எல்லா விசயங்களும் வியாழக்கிழமைகளில்தான் வெளியாகும். படப்பிடிப்பு, படத்தின் பெயர், டீஸர் ஆகியன வியாழக்கிழமைகளில்தான் வெளியானது.

பாடல்கள் மட்டும் வெள்ளிக்கிழமையன்று வெளியானது. அதற்குக் காரணம் அனறையதினம் படத்துக்கு இசையமைத்த அனிருத்தின் பிறற்தநாள் என்பதுதான். படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர்களைத் தொடர்ந்து டிரெயிலர் வெளியாகவேண்டும். அது வெளியாகவில்லை.

படம் அடுத்த செவ்வாய்க்கிழமை வெளியாகவிருப்பதால் இந்த வியாழக்கிழமை டிரெயிலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. அதற்குக் காரணம் படத்தை சென்சாருக்கு அனுப்புவது, முதல்பிரதியைத் தயார் செய்வது போன்ற வேலைகளில் தீவிரமாக இருந்ததால் டிரெயிலரை உருவாக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

வியாழக்கிழமையை விட்டால் படவெளியீட்டுக்கே நான்குநாட்கள்தாம் இருக்கின்றன என்பதால் டிரெயிலரை வெளியிடவில்லையாம். , 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close