Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் திருப்பதியில் அஜித் (வீடியோ இணைப்பு)

ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆவதற்கு முன்பு திருப்பதியில் சென்று வழிபடுவது அஜித்தின் வழக்கம். தீபாவளி சிறப்பாக வேதாளம் படம் வரும் செவ்வாய் அன்று வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு தற்போது திருப்பதியில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளார் அஜித். 

சிறுத்தை சிவாவுடன், வீரம் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது படமாக வேதாளம் படத்தில் இணைகிறார். வேதாளம் காதல் + மாஸ் காம்போவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனனும், நாயகியாக ஸ்ருதிஹாசனும் மற்றும் சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

வேதாளம் நிச்சயம் அஜித்துக்கு மாஸ் ஓப்பனிங்காக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவரை இல்லாத அளவிற்கு வேதாளம் மிகப்பெரிய வியாபாரம் செய்துவிட்டது. இன்னும் பாக்கியாக இருப்பது ரசிகர்களின் ஆதரவு மட்டுமே. படத்தின் வெற்றியை ரசிகர்கள் வரும் தீபாவளிக்கு நிர்ணயித்துவிடுவார்கள். 

ரசிகர்களுக்குப் பிடிக்கவேண்டும் என்று வேண்டுவதற்காக திருப்பதியில் தரிசனம் சென்ற அஜித்தின் வீடியோவிற்கு:

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close