Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"அட" 4 ஆச்சர்யங்கள் - கமல் பட கேரக்டர்கள்

மல்,  பிற்காலத்தில் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமிக்கப் போகும் நிகழ்வுகளை முன்பே தன் படங்களில் காட்சிப்படுத்திய தீர்க்கதரிசி. 'மகாநதி'யில்  சிட்பண்ட் மோசடி,  'அன்பே சிவம்' படத்தில்  சுனாமி, 'தசாவதாரம்' படத்தில் வரும் எபோலா வைரஸ், விக்ரம் படத்தில் தலிபான்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். அதையும் தாண்டி கமலுக்கும், அவரோடு பணியாற்றிய கதாப்பாத்திரங்களுக்கும் எப்போதும் ஒரு தொடர்புண்டு. அவற்றில் சில...

சக்ரி டொலெட்டி 

கமலின் மிகச்சிறந்த படங்களில்  ஒன்றான 'சலங்கை ஒலி'  படத்தில் கேமராவை வைத்துக் கொண்டு ஒரு சிறுவன் கமலை தவறான வகையில் படம் எடுப்பான். அவர் தான் பின்னாளில் , கமலை வைத்து ஒரு திரைப் படமே இயக்கினார் , படத்தின் பெயர் - " உன்னைப்போல் ஒருவன்" 

ஆனந்த் கிரிஷ்ணமூர்த்தி

சதி லீலாவதி படத்தில் " என்ர பையன் இஞ்சினியராகத்தான் வருவான் " என தன் மகன் பாத்திரத்தில் வரும் ஆனந்தை சொல்லிக்கொண்டே இருப்பார். "உன்னைப்போல் ஒருவன்" படத்தில் கம்ப்யூட்டர்  ஹேக்கிங் இஞ்சினியராக நடிப்பிலும்,  திரைத்துறையில் மிகச்சிறந்த சவுண்ட் இஞ்சினியராகவும் இயங்கி வருகிறார் ஆனந்த். 

ஸ்ருதிஹாஸன்

தேவர் மகன் படத்தில் சிவாஜியிடம் “ எந்தப் பாட்டையா? “ என செல்லமாய் ஒரு குரல் கேட்கும். “போற்றிப்பாடடி பெண்ணே” என பாடத்துவங்கும் குரலுக்கு சொந்தக்காரர் தான் பாடகி, நடிகை, இசையமைப்பாளர் என அசத்தும் ஸ்ருதி.


சந்தானபாரதி

மைக்கல் மதனகாமராஜன் படத்தில் சந்தான பாரதி இறுதிக்காட்சியில் மைக்கலாக வரும் கமலிடம், “ மைக்கேலு, என்னைய கைவிட்டற மாட்டியே, எனக்கு யாருமே இல்ல” என்பது தான் . அதன் பின்னர் கமலின் சிறந்த படங்களான மகாநதி, குணா போன்றவற்றை இயக்கியதும், இன்று வரை   எல்லாப் படங்களிலும் நடிப்பிலோ அல்லது திரைக்கு பின்னால் எதவோரு பணியிலோ கண்டிப்பாக இடம்பெறுவார் சந்தானபாரதி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்