Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டுபாகங்களாகத் தயாராகிறது ரஜினிபடம்?

  ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் அதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் எந்திரன்2 படவேலைகளும் மும்முரமாக நடக்கின்றனவாம்.

இம்மாதம் இருபதாம்தேதியிலிருந்து படப்பிடிப்புக்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கவிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ரஜினி, கபாலி படப்பிடிப்பிலிருந்து அப்படியே அமெரிக்கா செல்லவிருக்கிறாராம். அவர் போகிற நேரத்தில் இங்கிருந்து இயக்குநர் ஷங்கரும் போகவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அங்கு படத்தில் நடிக்கவிருக்கும் அர்னால்டை இருவரும் சந்தித்துப்பேசவிருக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. அர்னால்ட் படத்துக்குள் வந்ததும் படத்தின் மொத்தசெலவுத்தொகை பன்மடங்கு அதிகரித்துவிட்டனவாம்.

அவருடைய சம்பளம் மட்டும் சுமார் தொண்ணூற்றைந்து கோடி என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு செலவு ஆகிறது என்றவுடன், படத்தை இரண்டுபாகங்களாக எடுக்கலாம் என்று இயக்குநர் ஷங்கர் முடிவுசெய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆகவே, எந்திரன் 2 முடிந்ததும் எந்திரன் 3 யும் தயாராகும் என்று சொல்கிறார்கள். அப்படின்னா ரஜினி படவரிசையில் இன்னொருபடமும் சேருகிறதா?      

 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close