Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படம் என்னோடதுதான், ஆனா டைட்டில் என்னுதில்ல குழப்பும் லாரன்ஸ்

விஜய், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த ஜில்லா படத்தைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்துத்  தயாரிக்கும் படத்திற்கு “மொட்ட சிவா கெட்ட சிவா “ என்று பெயரிட்டுள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படம் இது.

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் கல்யாண் ராம் நடித்து  இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் "பட்டாஸ்" அந்தப்படத்தைத் தான் தமிழில் எடுக்கவிருக்கிறார்கள்.

ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த சிங்கம் புலி படத்தை இயக்கிய சாய்ரமணி, திரைக்கதை அமைத்து இயக்குகிறார். இந்தப் பெயரை ஏற்கெனவே, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வேந்தர் மூவீஸ் தயாரிக்க இருந்த படத்துக்கு வைத்திருந்தார்கள்.

இந்தத் தலைப்பு “ பட்டாஸ் “ படத்தின் மொழிமாற்றுப் படத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று  தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும்  இயக்குநர் சாய்ரமணியும் கேட்டுக் கொண்டனராம். அதனால் வேந்தர் மூவீஸ் மதன் இந்தத்  தலைப்பை விட்டுக் கொடுத்துவிட்டு வேறு  தலைப்பை வைக்க உள்ளாராம்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார், நாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் சதீஷ் , தம்பிராமய்யா, மனோபாலா, கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தெலுங்கு பட்டாஸ்  படத்துக்கு ஒளிப்பதிவு செய்த  சர்வேஸ் முராரியே இந்தப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கிய  ஜான் மகேந்திரன் , இந்தப்படத்துக்கு வசனம் எழுதுகிறார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close