Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் விட்டுக்கொடுக்க ஸ்ரீதேவி அடம்பிடிப்பதா?

அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் நடிகை ஶ்ரீதேவி நடித்திருந்தார். மும்பை தயாரிப்பாளர் சங்கத்தில் தனக்கு புலி பட தயாரிப்பாளர் சம்பள பாக்கி ரூபாய் 50 லட்சம் இன்னும் செட்டில் செய்யவில்லை என புகாரளித்தார்.

அந்தப் புகாரை மும்பை தயாரிப்பாளர் சங்கம் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அனுப்பி வைத்தது.  இந்நிலையில் தயாரிப்பாளர் பிடி.செல்வகுமார் தரப்பு "இது தொடர்பான பேச்சுகள் நல்லபடியாக முடிந்துவிட்டது, ஓரிரு நாளில் முழுமையாக முடிந்துவிடும்" என தெரிவித்தது.

இந்நிலையில் மற்றொரு தயாரிப்பாளரான சிபு தமீன்ஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்  "ஶ்ரீதேவியின் பிரச்சினை முடிக்க சென்னை செல்கிறேன். இதற்காக என் அறுவை சிகிச்சையைத் தள்ளி வைத்துள்ளேன்"என் மருத்துமனை கட்டிலில் படுத்திருக்கும் போட்டோவுடன் டிவிட் போட்டுள்ளார். 

இதன்பின்னர், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எஸ்.கே.டி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், இப்படத்தில் நடிக்க ஶ்ரீதேவிக்கு 3 கோடி சம்பளம் பேசப்பட்டதாம் அதைக் கொடுத்துவிட்டார்களாம். மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்வதற்காகக் கூடுதலாக ஸ்ரீதேவி பணம் கேட்டாராம். அவ்வாறு கேட்டதில் ஐம்பது லட்சம் கொடுக்கப்பட்டுவிட்டதாம். இன்னும் 20 லட்சம் தரவேண்டியிருந்ததாம். ஆனால், ஸ்ரீதேவியை நம்பி இந்தியில் படத்தை வெளியிட்டு அது சரியாகப் போகவில்லை என்பதால் இதற்கு மேல் பணம் தரமுடியாது என்று தயாரிப்பாளர்கள் தரப்பு சொல்லியிருக்கிறது. 

விஜய். ஸ்ருதி, சுதீப் ஆகியோர் படம் தாமதமானதால் ஏற்பட்ட சிக்க்ல்களைக் கருத்தில் கொண்டு, கடைசியாகக் கொடுத்த காசோலையைப் பயன்படுத்தவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close