Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விக்ரம் படம் டிராப்?

அரிமாநம்பி இயக்குநர் ஆனந்தசங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. முன்பே தொடங்கியிருக்கவேண்டிய அந்தப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. அதனால் இப்போது படத்துக்கே ஆபத்தாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

பத்துஎண்றதுக்குள்ள படம் வெளியான பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்று சொல்லப்படுவதால், இந்தப்படத்தையும் தொடங்க யோசிக்கிறார்களாம். அதனால் படத்தின் பட்ஜெட்டைக் குறைக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்லியிருக்கிறது.

படக்குழுவினர் அதற்கு உடன்படவில்லை போலும். இதனால் இந்தப்படமே வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் படம் நின்றுவிட்டது என்று திரையுலகில் பேச்சு தொடங்கிவிட்டது.

அதேசமயம், படத்தின் இயக்குநர் வேறொரு தயாரிப்பாளரிடம் பேசி இந்தப்படத்தைத் தயாரிக்க ஏற்பாடு செய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். ஐங்கரன் நிறுவனம் இல்லை என்பது மட்டும் உறுதி என்றும் சொல்லப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாகச் சொல்லாத வரை எல்லாமே மர்மம்தான்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்