Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலுக்கு அறிவுரை கூறிய தலாய்லாமா!

 

அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கம் சார்பில் ‘அப்துல் கலாம் சேவா ரத்னா விருதுகள்-2015' வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

கமல்ஹாசனும் கெளதமியும் தலாய்லாமாவை நேரில் சென்று சந்தித்தனர். அந்த சந்திப்பு பற்றியும், அவருடன் பேசியது பற்றியும் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

நேற்று காலை தலாய் லாமா அவர்களை சந்தித்தேன்.  அவரது இணகத்தையும், நோக்கத்தையும் மெச்சாதிருக்க முடியவில்லை காந்திஜியின் ரசிகனான நான் இவரை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை. நான் பகுத்தறிவாளனாக இருப்பதும்,  இது ஆன்மிகம் சார்ந்த சந்திப்பு இல்லை எனினும் இந்த சந்திப்பு எனக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் தந்தது.

எனக்கு ஆன்மிக விஷயங்களில் எவ்வளவு ஈடுபாடில்லாமல் இருந்ததோ அதே போல அவருக்கு சினிமா விஷயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை. 'நான் இதுவரை ஒரு சினிமாவையும் பார்த்ததில்லை, தொலைக்காட்சியைக் கூட பார்த்ததில்லை' என அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
 
ஆனாலும், எனது கலையின் மூலமாக இந்தியா உலகுக்கு அளித்த 'அகிம்சை' என்ற மிகப்பெரிய தத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என அறிவுரைத்தார். அகிம்சையின் பால் எனக்குமிருக்கும்  நம்பிக்கையை அவரிடம் சொன்னேன், விரைவில் அந்த திசையில் பயணிப்பேன் என்றும் கூறினேன்.

அவர் அறிமுகம் இல்லாத யாருடனும், அவருக்கு அந்நியமான எங்களுடன் நேரம் செலவழிப்பதை அவர் விரும்பி  உற்சாகத்தோடு உரையாடினார்.. அது எனக்கு 2000 ஆண்டுகள் பழமையான சமணர்  கவிதையான
“ யாதும் ஊரே யாவரும் கேளிரை" ஞாபமூட்டியது"  என்று  கூறியுள்ளார் கமல்ஹாசன்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close