Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலேசியாவில் தீபாவளி - கபாலி அப்டேட்ஸ்!!

ரஜினி நடிப்பில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் படப்பிடிப்பு நடந்துவரும் படம் கபாலி. இப்படத்திற்கான முதல் பாதி படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. தொடர்ந்து மலேசியாவில் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

மலேசியா முருகன் கோவில், சில்லாங் மற்றும் மலேசியா சிறைச்சாலையென்று படப்பிடிப்பு நடந்துவரும் அதே நேரத்தில் ரசிகர்களையும் ரஜினி சந்திக்க தவறுவதில்லை. மலேசியா ரசிகர்களை படப்பிடிப்பு செல்லும் இடமெல்லாம் ரஜினி சந்தித்துவருகிறார்.

தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட கபாலி டீமே மலேசியாவில் மையம்கொண்டிருக்கும் வேளையில், நேற்று நடிகை ரித்விகாவும் மலேசியா கிளம்பி சென்றிருக்கிறார். இன்றிலிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

வழக்கமாய் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடும்  ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்காகவே இம்முறை சென்னை வரவில்லை. கபாலி டீமுடன் மலேசியாவிலேயே தீபாவளி பண்டிகையை கொண்டாடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மாத இறுதி வரை படப்பிடிப்பு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close