Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்சேதுபதி நடிக்கும் படத்திற்கு ரஜினி பட தலைப்பு!

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்திற்கு தர்மதுரை என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் ரஜினி நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான தர்மதுரை படத்தின் தலைப்பு. இப்படத்தின் மூலம் மீண்டும் சீனி ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார். படத்தை தயாரிக்க இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இவர் விஜய் சேதுபதியின் வசந்தகுமார் படத்தை தயாரித்தவர்.

வசந்தகுமார் படம் கால்ஷீட், மற்றும் சில பிரச்னைகளுக்கு உள்ளாகி கைவிடப்பட்டது. மேலும் ஆர்.கே.சுரேஷ் விஜய் சேதுபதி மீது தயாரிப்பு சங்கத்தில் புகார் கொடுத்து பெரிய பிரச்னை ஆனது குறிப்பிடத்தக்கது.

அதே போல் விஜய் சேதுபதியும் நடிகர் சங்கத்தின் உதவியை நாடினார்.. இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் கைகோர்த்திருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது. எனினும் நெருங்கிய வாட்டாரங்களில் விசாரித்ததில் தற்போது இருவருக்கும் இடையில் பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும். விரைவில் இந்தப் புதிய படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் வெகுநாட்களாக வெளியாகாத நிலையில் அடுத்தப் படத்தில் இருவரும் இணைந்திருப்பது மேலும் ஆச்சர்யம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close