Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேரிப்பெண்ணாக மேக்கப் இல்லாமல் சமந்தா!

வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் , சமந்தா நடிக்கும் புதிய படம் விரைவில் துவங்கப்பட உள்ளது. வடசென்னை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் வட சென்னையை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது. இப்படத்தின் நாயகி சமந்தா முதல் முறையாக சேரிப்பெண்ணாக நடிக்க இருக்கிறார்.

கொஞ்சம் கூட மேக்கப்போ அல்லது ஃபேசியல் போன்ற விஷயங்களோ இன்றி , தொடர் ஷூட்டிங்கின் போது வெயிலால் உண்டாகும் முகக்கருமையைக் கூட நீக்காமல் அப்படியே நடிக்கப் போகிறார் என்பதுதான் சிறப்பு. இதில் சமந்தா சொந்தக் குரலில் பேசப்போவதும் கூடுதல் தகவல்.

சமந்தா சில படங்களில் சொந்தக் குரலில் பேசினாலும் இதில் சென்னைத் தமிழ் பேசி சேரி வாழ் லோக்கல் பெண்ணாக நடிக்க இருக்கிறார். தனுஷுடன் சமந்தா நடிப்பது இது இரண்டாவது முறை. வேலையில்லா பட்டதாரி படக்குழுவின் அடுத்த படைப்பான தங்கமகன் படத்தில் இன்னொரு நாயகி சமந்தா. அதில் எமி ஜாக்சன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close