Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விக்னேஷ்சிவனுடைய அடுத்த படத்தின் பெயர்?

  நானும்ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன், அடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு முன்பணம் கொடுத்துவிட்டதாகக்கூடச் சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தில் மீண்டும் விஜயசேதுபதி நயன்தாரா ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள் என்றும் அது இரண்டுநாயகிகளைக் கொண்ட கதை என்பதால் இன்னொரு நாயகியாக த்ரிஷா நடிப்பார் என்றும் பேச்சு இருக்கிறது. இன்னொருபக்கம் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விக்னேஷ்சிவன் படம் இயக்குவது மட்டும்தான் உறுதியான தகவல் என்றும்  நாயகன் நாயகி உட்பட மற்ற எல்லாமே பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் அதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அதேநேரம் தயாரிப்புநிறுவனத்தின் சார்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு தலைப்பு இந்தப்படத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அந்தத் தலைப்பு போறபோக்குல ரெண்டுகாதல் என்று சொல்லப்படுகிறது. இதுவரை சொல்லப்பட்டுவரும் செய்திகளுக்கும் இந்தத்தலைப்புக்கும் பொருத்தம் சரியாக இருப்பதால் இதுவே படத்தின் பெயராக இருக்கும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கின்றனர். விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.  

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்