Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யும் நடிகர்கள்

  புயல் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்ட மக்களுக்கு அரசியல்கட்சிகள் தங்களால் இயன்ற நிவாரணங்களைச் செய்துவருகின்றனவாம். ஆந்திரா புயலால் பாதிக்கப்பட்டபோது நிதியுதவி செய்த திரைப்படநடிகர்கள் இங்கு எந்த உதவியும் செய்யவில்லை என்கிற விமர்சனங்கள் சமுகவலைதளங்களில் பரவத் தொடங்கிவிட்டன.

ஆனால் அதற்கு முன்பே தன்னுடைய ரசிகர்மன்றம் மூலம் மருத்துவமுகாம்கள் நடத்தச் சொல்லியிருந்தாராம் நடிகர் சந்தானம். அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம்கள் நடத்தி மருந்துகள் விநியோகம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், நடிகர்சங்கச் செயலாளர் விஷாலும் தன்னுடைய ரசிகர்மன்றம் மூலம் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறாராம்.

கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலீயூர் என்ற கிராமமக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை மற்றும் நிதியுதவிகளும் விஷால் ரசிகர்மன்றத்தினர் வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் ஆந்திராவில் புயல் தாக்கியபோது போட்டி போட்டு உதவிய நடிகர்கள் இங்கு நடந்ததைக் கண்டுகொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கிறது. அதற்காக அவர்கள் படங்களைப் பார்க்காமல் தண்டித்துவிடப் போகிறார்களா என்ன?  

 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close