Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிம்பு, விஷால் மோதல் தொடருகிறதா?

நடிகர் சங்கத் தேர்தலின் போது எதிரெதிர் அணியில் சிம்புவும் விஷாலும் போட்டியிட்டனர். அந்த நேரத்தில் விஷாலைப் பற்றி சிம்பு கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

தற்பொழுது மீண்டும் இருவரும் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டிற்குத் தயாராகிவரும் படம் “இதுநம்மஆளு”. அதுபோல விஷால் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் “கதகளி”.

விஷாலுக்கு ஜோடியாக மெட்ராஸ் பட நாயகி கேத்ரின் தெரஸா நடிக்க, ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை விஷாலும், பாண்டிராஜூம் இணைந்து தயாரித்துவருகிறார்கள்.  சமீபத்தில் விஷாலின் கதகளி படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. இப்படம் பொங்கல் அன்று வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

அதே நாளில் சிம்பு நடிக்கும் இதுநம்மஆளு படமும் வெளியாகவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. டி.ராஜேந்தர் தயாரிப்பில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இப்படத்திற்கு குரலறசன் இசையமைத்துள்ளார்.

இவ்விரு படங்களையும் பாண்டியராஜ் இயக்கியுள்ளதால் ஒரே நாளில் இரண்டு படம் வெளியாகவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்