Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொட்டும் மழையில் விஜய் படப்பிடிப்பு!

விஜய் நடித்து வரும் அவரது 59வது படத்தின் படப்பிடிப்புகள் கொட்டும் மழையிலும் விடாது நடந்து வருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்துவரும் படம் விஜய்யின் 59வது படம். படத்திற்கு தற்சமயம் காக்கி எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை கொட்டித்தீர்த்துவருகிறது. மேலும் எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழவே பள்ளி, கல்லூரிகள், ஒரு சில அலுவலகங்கள் என விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பல படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

எனினும் விஜய் படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. கொட்டும் மழையில் விஜய் எதிரிகளுடன் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சியை மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.  விஜய் மழை நீரில் போலீஸ் உடையில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் சுற்றலில் இருக்கிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்