Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் மீது அவதூறு வழக்கு?

சமீபத்தில் தனியார் டிடிஹெச் விளம்பரத்தில் நடித்த தனுஷுக்கு நாளுக்கு நாள் சிக்கல்கள் உருவாகிவருகின்றன. தனுஷ் வரும் அந்த விளம்பரத்தில் கேபிள் டிவிக்கள் பார்க்காத மொழிச் சேனல்களை பார்வையாளர்கள் தலையில் கட்டிவிடுவதாக வசனங்கள் உள்ளன.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட நிறுவனம் அந்த விளம்பரத்தில் வரும் வசனங்களை நீக்கி விட்டன என்றாலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனுஷ் இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும் தனுஷ் தரப்பில் இதற்கு இன்னும் பதில் வரவில்லை.

தனுஷ் மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லையேல் அவர் மீது அவதூறு வழக்குப் போடுவோம் என அறிவித்துள்ளனர் தமிழ்நாடு கேபிள் டிவி சங்கத்தினர். இந்நிலையில் தனுஷ் இதற்கு என்ன முடிவு எடுக்கவிருக்கிறார் என்பது பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close