Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் - அட்லீ படத்தின் பெயர் தாறுமாறு?

சிம்பு தேவன் இயக்கத்தில் "புலி" படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவருகிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் வேளையில் இன்னும் படத் தலைப்பு உறுதியாகவில்லை. http://img.vikatan.com/cinema/2015/11/images/250X184/55114_thumb.jpg?d=1447677296

ராஜா ராணி படத்தை தொடர்ந்து அட்லீக்கு இரண்டாவது படம் இது. விஜய்க்கு 59வது படம் என்பதால் தலைப்பை பற்றி படக்குழு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனராம். 

விஜய் போலீஸாக இப்படத்தில் நடிக்கிறார் என்பதால்  “காக்கி“, “வீரன்” உள்ளிட்டப் பெயர்கள் வைக்கப்படலாம் என்று சொல்லப்பட்டுவந்தது. தற்பொழுது “தாறுமாறு” என்ற பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

இயக்குநர் மகேந்திரன், சமந்தா, எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துவருகின்றனர். படத்தை எஸ்.தாணு தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close