Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர், நடிகர்சங்கநிர்வாகிகள் சந்திப்பு புகைப்படம் வெளிவராதது ஏன்?

தென்னிந்தியநடிகர்சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகளான தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன் நவம்பர் 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச்செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சரைச் சந்தித்தனர்.

மகிழ்வோடு வரவேற்று அக்கறையோடு நடிகர்சங்கத்தின் நிலையைக் கேட்டறிந்து கொண்டு புதியநிர்வாகத்தை மனதார வாழ்த்தினார். தென்னிந்திய நடிகர்சங்கத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன், திரு மேஜர்சுந்தர்ராஜன் ஆகியோர் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை இந்தப் புதுநிர்வாகம் மீண்டும் கொண்டுவரவேண்டும். இந்தப்புதுநிர்வாகம் அதைச் செய்யுமென்று நம்பிக்கை இருக்கிறது. சங்கத்தின் வளர்ச்சிக்கு அரசின் முழு ஆதரவு இருக்குமென்றும் கூறினார்.

சங்கத்தின் புதுக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று பொதுச்செயலாளர் விஷால் வேண்டுகோள் வைக்க புன்சிரிப்போடு முன்கூட்டியே அந்நாளை தெரிவிக்குமாறும் கண்டிப்பாகக் கலந்துகொள்வதாகவும் உறுதி கூறினார் என்று பத்திரிகைகளுக்கு நடிகர்சங்கம் சார்பில் செய்தி அனுப்பப்பட்டது. ஆனால் அந்தச்சந்திப்பு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை. அது முதல்வர் அலுவகம்தான் வெளியிடவேண்டுமாம்.

அவர்கள் ஏன் உடனே வெளியிடவில்லை என்றால், புயல் மழை காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தத்தளித்துக்கொண்டிருக்கிற நேரத்தில், முதல்வர் வெள்ளச்சேதத்தைக் கூடப் பார்வையிட வராமல் நடிகர்களைச் சந்திப்பதா? (அந்தச்சந்திப்புக்குப் பிறகு முதல்வர் மழைசேதங்களைப் பார்வையிட்டார்) என்கிற விமர்சனம் வந்துவிடும் என்பதாலேயே புகைப்படம் வெளியிடப்படவில்லையென்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்றோ அல்லது நாளையோ அந்தப்புகைப்படம் வருமென்றும் சொல்கிறார்கள்.

நாசர் தலைமையில் வெற்றி பெற்ற நடிகர்சங்க நிர்வாகிகள் எல்லாம், வெற்றி பெற்ற ஓரிருநாட்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. அப்போதே முதல்வர் கொடநாடு செல்வதாகவும் சென்று வந்த பின்னர் சந்திக்கலாம் என்று தேதி கொடுக்கப்பட்டுவிட்டதாம்.

திடீரென மழைவெள்ளம் வந்துவிட்டது. அதனால் கொடுத்த தேதியை மாற்றவேண்டாம் என்பதற்காக முதல்வர் அவர்களைச் சந்தித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close