Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் சங்க வளர்ச்சிக்கு அரசு ஆதரவு! ஜெயலலிதா அறிவிப்பு

தென்னிந்தியநடிகர்சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகளான தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன் நவம்பர் 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச்செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சரைச் சந்தித்தனர்.

மகிழ்வோடு வரவேற்று அக்கறையோடு நடிகர்சங்கத்தின் நிலையைக் கேட்டறிந்து கொண்டு புதியநிர்வாகத்தை மனதார வாழ்த்தினார். தென்னிந்திய நடிகர்சங்கத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன், திரு மேஜர்சுந்தர்ராஜன் ஆகியோர் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை இந்தப் புதுநிர்வாகம் மீண்டும் கொண்டுவரவேண்டும். இந்தப்புதுநிர்வாகம் அதைச் செய்யுமென்று நம்பிக்கை இருக்கிறது. சங்கத்தின் வளர்ச்சிக்கு அரசின் முழு ஆதரவு இருக்குமென்றும் கூறினார்.

சங்கத்தின் புதுக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று பொதுச்செயலாளர் விஷால் வேண்டுகோள் வைக்க புன்சிரிப்போடு முன்கூட்டியே அந்நாளை தெரிவிக்குமாறும் கண்டிப்பாகக் கலந்துகொள்வதாகவும் உறுதி கூறினார் என்று பத்திரிகைகளுக்கு நடிகர்சங்கம் சார்பில் செய்தி அனுப்பப்பட்டது.

அறிக்கை மட்டுமே வெளியானநிலையில், இந்தச் சந்திப்பு பற்றியான எந்த வித புகைப்படமும் நேற்று வெளியாகவில்லை. தற்பொழுது தான் நடிகர் சங்க உறுப்பினர்களான விஷால், நாசர் உள்ளிட்டோருடன் ஜெயலலிதா சந்தித்த புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

நேற்று மழை காரணமாகவும், முதலமைச்சர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றதாலும், இன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close