Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லட்சுமி மேனனா?...பார்வதியா?...விஜய் சேதுபதிக்கு ஜோடி யார்?

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்திற்கு தர்மதுரை என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் ரஜினி நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான தர்மதுரை படத்தின் தலைப்பு. இப்படத்தின் மூலம் மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார். படத்தை தயாரிக்க இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இவர் விஜய் சேதுபதியின் வசந்தகுமாரன் படத்தைத் தொடங்கியவர்.

வசந்தகுமாரன் படம் கால்ஷீட், மற்றும் சில பிரச்னைகளுக்கு உள்ளாகி கைவிடப்பட்டது. மேலும் ஆர்.கே.சுரேஷ் விஜய் சேதுபதி மீது தயாரிப்பு சங்கத்தில் புகார் கொடுத்து பெரிய பிரச்னை ஆனது குறிப்பிடத்தக்கது. அதே போல் விஜய் சேதுபதியும் நடிகர் சங்கத்தின் உதவியை நாடினார்.. இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் கைகோர்த்திருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது. எனினும் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததில் தற்போது இருவருக்கும் இடையில் பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

சலீம் படத்திற்க்கு பிறகு ஸ்டுடியோ 9 புரொடக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார், ஒளிப்பதிவு சுகுமார், இசை யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங் காசி விஸ்வநாதன், கலை பத்மாமகன்.இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக லட்சுமி மேனன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என நெருங்கிய வட்டாரங்களில் தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் யார் நடித்தாலும் விஜய் சேதுபதியுடன் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாகவே இருக்கும் எனலாம். இந்நிலையில் லட்சுமி மேனன் தனுஷின் புதிய படம்,. ஜெயம் ரவியின் மிருதன் படங்களிலும், பார்வதி பெங்களூரு டேய்ஸ் ரீமேக்கிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close