Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர்சங்கத்தில் சிவாஜி, மேஜர் இருந்த காலம் பொற்காலமா?

தென்னிந்தியநடிகர்சங்கத்தின் நிர்வாகிகள், நவம்பர் 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்தனர். அப்போது, அவர்களை மகிழ்வோடு வரவேற்று அக்கறையோடு நடிகர்சங்கத்தின் நிலையைக் கேட்டறிந்து கொண்டு புதியநிர்வாகத்தை மனதார வாழ்த்தினார்.

தென்னிந்திய நடிகர்சங்கத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன், திரு மேஜர்சுந்தர்ராஜன் ஆகியோர் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை இந்தப் புதுநிர்வாகம் மீண்டும் கொண்டுவரவேண்டும். இந்தப்புதுநிர்வாகம் அதைச் செய்யுமென்று நம்பிக்கை இருக்கிறது. சங்கத்தின் வளர்ச்சிக்கு அரசின் முழு ஆதரவு இருக்குமென்றும் கூறினார்.

சங்கத்தின் புதுக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று பொதுச்செயலாளர் விஷால் வேண்டுகோள் வைக்க புன்சிரிப்போடு முன்கூட்டியே அந்நாளை தெரிவிக்குமாறும் கண்டிப்பாகக் கலந்துகொள்வதாகவும் உறுதி கூறினார் என்று பத்திரிகைகளுக்கு நடிகர்சங்கம் சார்பில் செய்தி அனுப்பப்பட்டது.

இந்தச்செய்திக்குறிப்பின்படி, சிவாஜிகணேசன், மேஜர்சுந்தர்ராஜன் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்த காலத்தைப் பொற்காலம் என்று முதல்வர் சொன்னதாகத் தெரிகிறது. 1977 முதல் 1985 வரை சிவாஜிகணேசன் தலைவராகவும் மேஜர்சுந்தர்ராஜன் செயலாளராகவும் இருந்தார்கள். அதன்பின் 85 இலிருந்து 2000 வரையிலான பதினைந்துஆண்டுகள் ராதாரவியும் 2000 இலிருந்து 2006 வரை விஜயகாந்தும், 2006 இலிருந்து 2015 வரை சரத்குமாரும் தலைவராக இருந்தார்கள்.

முதல்வரின் கருத்துப்படி இவர்கள் காலம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. இது இப்போது விவாதப்பொருளாகியிருக்கிறதாம். சிவாஜி காலத்தில்தான் கடன் ஏற்பட்டதென்றும் விஜயகாந்த் தலைவராக இருந்தபோது அது அடைக்கப்பட்டதென்றும் சொல்வார்கள்.

கடன் வாங்கிய காலத்தைப் பொற்காலம் என்றும் கடன் அடைத்த காலத்தைப் பற்றிப் பேசாமல் இருப்பதற்கும் அரசியல்தான் காரணமென்று சொல்லப்படுகிறது. விஜயகாந்தாவது எதிரணியில் இருக்கிறார் சொந்த அணியிலிருக்கும் சரத்குமாரையும் முதல்வர் கண்டுகொள்ளாததது ஏன் என்கிற கேள்வி பலருக்கும் வந்திருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close