Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விரைவில் விஜயகாந்த் மகனின் அடுத்தபடம்?

சகாப்தம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். விஜயகாந்த் தனது சொந்தத் தயாரிப்பில் உருவாக்கிய அப்படம் எதிர்பார்த்த அளவில் போகவில்லை என்றாலும் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றது.

இந்நிலையில் சண்முகபாண்டியனின் அடுத்த படத்திற்கான வேலைகள் ஆரம்பித்துள்ளன. மகனின் படத்திற்காக பலரிடமும் கதைகள் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் விஜயகாந்த் வரலாற்றுக் கதையாக எதிர்பார்க்கிறார் எனக் கூறப்படுகிறது.

படம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் துவங்கப்பட உள்ளது. இந்தப்படமும் விஜய்காந்தின் தயாரிப்பு நிறுவனமாக கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. இதற்கிடையில் விஜயகாந்த் தேர்தலுக்கான ஆயத்த வேலைகளிலும் பிசியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close