Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’ப்ளீஸ்... ஷோசியல் மீடியாவில் நடிகர்களைத் திட்டாதீங்க!’’- தனுஷின் உருக்கமான வேண்டுகோள்

நாளை வெளிவரும் ஆனந்த விகடனில் தனுஷின் விரிவான பேட்டி இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பேட்டியின்போது தன் சமூக வலைதளப்பக்கங்களை எப்படி கையாள்கிறேன் என்று தனுஷ் பகிர்ந்து கொண்டது மட்டும் இங்கே...

’’நான் சோஷியல் மீடியாவை என் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கிறேன். அதுக்காக நான் 6 பாலிசியை கடைபிடிக்கிறேன்.

1) சோஷியல் மீடியாவில் நான் ரொம்ப நேர்மையா இருக்கேன். இன்னும் ஓப்பனா சொல்லணும்னா, எப்போ என்னால உண்மையைச் சொல்ல முடியுதோ, அப்போ சொல்றேன். சொல்ல முடியாத இடத்துல அமைதியா இருந்துடுறேன். இக்கட்டான சமயங்கள்ல உண்மையும் சொல்லாம, பொய்யும் சொல்லாம அமைதியாக் கடந்துடுறேன்!

2) சில விஷயம் யோசிக்கிறப்ப எமோஷனலா இருக்கும். அதையே எழுதிப் பார்த்தா காமெடி ஆகிடும். ஆனாலும், அதை போஸ்ட் பண்ணிருவேன். நினைச்ச மாதிரியே காமெடி கமென்ட்ஸ் வரும். ஆனா சீரியஸா எடுத்துக்க மாட்டேன். என் மனசுல இருக்கிறதைச் சொல்லிட்டோம்னு அதோட அதை விட்ருவேன்.

3) ரசிகர்களுடன் நேரடியான தொடர்புல இருக்கிறதுதான் சோஷியல் மீடியா மூலமா எனக்குக் கிடைக்கிற பலன். அவங்க என்னைப் பத்தி, என் படங்களைப் பத்தி என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சுக்க அது ஒரு நல்ல பிளாட்ஃபார்ம்.

4) என் படங்களை மார்க்கெட் பண்ணவும் அந்த பிளாட்ஃபார்மை பயன்படுத்துறேன். நேரடியா உண்மையா விளம்பரப்படுத்துறேன். இன்னைக்கு டிரெண்டுக்கு மார்க்கெட்டிங் பண்றது தப்பில்லையே. அதைப் பண்றப்ப எந்த ஒளிவுமறைவும் இல்லாம, ஒரு விளம்பரமா மட்டும் பண்றேன்..

5)  நிறைய பேருக்கு உதவி செய்யவும் சோஷியல் மீடியா இடம் கொடுக்குது. யாருக்காவது ரத்தம் வேணும்னா, உடனே கிடைக்குது. யாராவது காணாமப் போயிட்டா அவங்களைப் பத்தின விஷயங்களை வேகமா ஷேர் செய்ய முடியுது. அதுக்கும் சோஷியல் மீடியாவையும், என் நெட்வொர்க்கையும் பயன்படுத்துறேன்.

6) ஷோசியல் மீடியால இருக்கிற ஒரு நெகட்டிவ் விஷயம்னா, அது ரசிகர்கள் சண்டை போட்டுக்கிறதுதான். உங்க குடும்பத்தை நல்லபடியா கவனிச்சுக்கிட்ட பிறகு, ஒரு நடிகரைக் கொண்டாடுறதுல எந்த தப்பும் இல்லை. ஆனா அதுக்காக இன்னொரு நடிகரைத் திட்ட வேண்டிய அவசியமே இல்லை. இது கண்டிப்பா ஆரோக்கியமான விஷயம் இல்லை. மக்களைச் சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும் முடியுற இடத்துல நடிகர்கள் இருக்காங்க. அவங்களைப் பிடிக்கலைன்னா அவங்க படங்களைப் பார்க்காதீங்க. எதுக்கு திட்டணும்? இதை ஒரு வேண்டுகோளாவே வைக்கிறேன். இதைக் கேட்டு பத்து பேராச்சும் மாறினா எனக்கு சந்தோஷம்தான்!’’

- கார்க்கி பவா

’மாரி’ படத்துக்கான கலவையான விமர்சனங்கள், பாடலாசிரியராக கலங்கிய தருணங்கள், ’3’ படத்தில் மிஸ்ஸான விஷயம், விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையிலான விசேஷம் என தனுஷ் பகிர்ந்து கொண்ட செய்திகளும் ’தங்கமகன்’ படத்தின் ‘எக்ஸ்க்ளூசிவ்’ ஸ்டில்களும் நாளை வெளிவரும் ஆனந்த விகடனில்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close