Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூங்காவனம் - வேதாளம் 7 ஒற்றுமைகள்!

இந்த தீபாவளி ஒரு பக்கம் உலகநாயகன் தீபாவளி, மறுபக்கம் தல தீபாவளி. இரண்டு படமும் தியேட்டர்களில் நல்ல வசூல். தூங்காவனம், வேதாளம் இரண்டு படமும் தீபாவளி ரிலீஸ் என்பது போலவே இரண்டுக்கும் இன்னும் சில ஒற்றுமைகளும் இருக்கிறது. ஒரு ஜாலி அலசல்...

1. இரண்டு படங்களிலும் ஒரு முக்கியத் திருப்பத்துக்கு காரணமா போதைப் பொருள் இருக்கும்.

2. இரண்டு படத்திலும் ஹீரோவுக்கு வேண்டியவங்க கடத்தப்படுவாங்க.

3. இரண்டு படத்திலும் ஹீரோக்கள் இன்டர்வல் ப்ளாக்ல கதவை சும்மா தட்டு, தட்டுனு தட்டுவாங்க!

4. தூங்காவனத்தில் கமல் - வேதாளத்தில் ஸ்ருதிஹாசன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்க ரெண்டு படத்துலயும் நடிச்சிருப்பாங்க.

5. கமல் பையனா நடிச்சிருக்க அமன் வில்லனுக்குத் தெரியாம (அப்படி நினைச்சுகிட்டு) கமல் கூட போன்ல பேசுவார். அதே போல வேதாளத்தில் லட்சுமி மேனனும் அந்த கார் டிரைவருக்கு தெரியாம (அந்த கார்ல டிரைவர் இருந்தாரானே தெரியல) அஜித் கூட போன்ல பேசுவாங்க.

6. க்ளைமாக்ஸ்ல அடிபட்டு கிடக்கும் கமலை மகன் அமன் போய் மருத்துவமனையில் சேர்ப்பார். இங்கே ஃப்ளாஷ்பேக்ல லட்சுமி மேனன், அஜித் அடிபட்டு கிடக்கும் போது கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல சேர்ப்பார்.

7. இதிலும் க்ளைமாக்ஸ்ல படம் முடியும். அதுலயும் க்ளைமாக்ஸ்ல படம் முடியும்.  இதுக்கு மேலயும் இந்த ’உலகத் தரம் வாய்ந்த கட்டுரை’யைப் படிச்சுட்டு இருக்கீங்களா...

ஆல் தி பெஸ்ட்!

- பா. ஜான்சன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close