Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாயாவின் நாயகனுக்குத் திருமணம்

 தாமிரா இயக்கத்தில் இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடித்த ‘ரெட்டச் சுழி’ படத்தில்  அறிமுகமானவர், ஆரி.

தொடர்ந்து ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, மற்றும் அண்மையில் வெளியான  ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். மாயா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.

 இவருக்கும், இலங்கையை சேர்ந்த நதியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. நதியா, ‘பி.ஏ.’ பட்டதாரி. லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆரி-நதியா இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். 
 
இவர்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. 
 
 சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close