Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நயன்தாராவால் மறக்கமுடியாத காதல்!

ஹரி இயக்கத்தில் ஐயா (2005) படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலகப் பயணத்தை தொடங்கியவர் நயன்தாரா. சந்திரமுகி, கஜினி, வல்லவன், ஏகன், ஈ, குசேலன் என்று அனைத்து பெரிய ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். இன்றுவரைக்கும் நம்பர் 1 நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா மட்டுமே.

நடிப்பில் படு சின்சியர், தரப்பட்ட வேடத்தில் பக்காவாக ஐக்கியமாகும் நயன்தாரா இரண்டு முறை காதல் தோல்வியைச் சந்தித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது “நானும் ரவுடிதான்” பட இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாகவும் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் தன்னுடைய முதல் காதல் அனுபவத்தை சமீபத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

நயன்தாராவின் முதல் காதல் அனுபவம் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது நடந்திருக்கிறது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கக்கூடிய பள்ளி. ஒருநாள் நயன்தாரா மேஜையில் ஒரு காதல் கடிதமும், ரோஜாப்பூவும் இருந்திருக்கிறது. அடுத்த நாளும் அதேபோல் ரோஜாவும், காதல்கடிதமும் நயன்தாராவின் மேஜையில் இருந்தது.

தினமும் இவ்வாறு நடந்ததால் பயந்துபோய் வீட்டில் சொல்லிவிட்டார். பின்னர் பள்ளி முதல்வரிடமும் புகார் செய்திருக்கிறார்கள். ஏழாம் வகுப்பு படிக்கும் பையன் ஒருவன் தான் இவ்வாறு தினமும் காதல் கடிதமும், ரோஜாப்பூவும் வைத்து சென்றிருக்கிறான் என்பது விசாரணையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அந்த முதல் காதல் அனுபவத்தை இன்று வரையிலும் என்னால் மறக்கவே முடியாது என்று பூரிக்கிறார் நயன்தாரா.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close