Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நயன்தாராவுக்குக் கிடைக்காத அரிய வாய்ப்புகள் 7

மிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு இன்னும் சில முக்கிய வாய்ப்புகள் கிடைக்காமலேயே உள்ளன. அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை நாம் கவலைப்படாமல் இருக்க முடியுமா?

1. ஷங்கர் படம்… ஸ்ரேயா, சதாவுக்குக் கூட ஷங்கர் பட நாயகி தோரணை கிடைத்துவிட்டது. இன்னும் நயனுக்குக் கிடைக்கவில்லை. சிவாஜி படத்தில் ஒரு பாட்டில் மட்டுமே ஆடுகிற வாய்ப்பு என்றாலும் ஹீரோயினாக கிளிமஞ்சாரோ ஆடவே இல்லையே.

2. கமல்ஹாசன் படம்…நயனின் சமகாலப் போட்டியாளர் த்ரிஷா, கமலுடன் இரண்டாவது படம் கூட நடித்துவிட்டார் ஆனாலும் நயன்தாராவுக்கு இன்னும் அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. கமலுடன் நடிப்பது ஒவ்வொரு நாயகிக்கும் தவம். நயனுக்கு வேண்டுமானால் ஆசையில்லாமல் இருக்கலாம் நமக்கு இருக்கே. பச்சக் பச்சக் எப்போது?

3. கௌதம் மேனன் படம்… ஹீரோயின்களை தேவதைகளாகக் காட்டும் திறமை கௌதமுக்கு மட்டுமே உண்டு. அப்படித்தான் ஹேமானிகா(த்ரிஷா), ஜெஸ்ஸி(த்ரிஷா), மாயா(ஜோதிகா), நித்யா (சமந்தா)கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள். அந்த வாய்ப்பு எப்போது நயனுக்கு?

4. பாலா படம்…ஒரு நடிகை நடிப்பிற்காக பேசப்பட வேண்டுமெனில் பாலா படத்தில் நடித்தே ஆக வேண்டும் ஆங்.. ஆனால் அவரோ, பூஜா,வேதிகா, வரு என்று போகிறார். நயனைக் கண்டுகொள்வதில்லை

5. மணிரத்னம் படம்...ஹீரோயின்களுக்கு தனித்துவமான கேரக்டரும், பெயரும் கிடைக்க வேண்டுமாயின் அது மணிரத்னம் இயக்கத்தில் கண்டிப்பாக நடக்கும். அந்தத் தனித்துவம் இன்னும் நம் நயனுக்குக் கிடைக்கவில்லை.

6. இந்திப் பட வாய்ப்பு… யார் யாரோ இந்திப்பக்கம் போயி பெரிய ஹீரோக்களோட ஜோடி சேர்ந்து நடித்து தொழிலதிபரோட திருமணம்னு நியூசும் வந்துவிட்டது. ஆனால் நயன்தாராவின் மாஸ் இந்த இந்தி கான்களின் கண்களுக்குத் தெரியவில்லையே.

7. அப்பறம் என்ன இதெல்லாம் நடந்துட்டா அடுத்து பெரிய களம் தான். அரசியல்.. நாம கேக்கற அடுத்த கேள்வி எப்போ அரசியலுக்கு வருவீங்க மேடம். இந்த வாய்ப்பு எப்போ..

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close