Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண் கலங்கிய சூர்யா

பசங்க2 படம் நவம்பர் இறுதியில் வெளிவருவதாகச் சொல்லியிருந்தார்கள். இப்போது அதில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எப்போது படம் வெளியாகும் என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

படத்தில் சூர்யா கௌரவத்தோற்றத்தில் நடித்திருக்கிறார், இதனால் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வருகிறார் என்று எண்ணவேண்டாம். சுமார் ஐம்பதுநிமிடங்கள் படத்தில் வருகிறாராம் சூர்யா. படத்தை முழுமையாகத் தயாராகிவிட்டதாகவும் அண்மையில் சூர்யாவுக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்களாம்.

படத்தைப் பார்த்த சூர்யா கண்கலங்கிவிட்டார் என்றும் படத்தின் கடைசி இருபதுநிமிடங்கள் மிகவும் நன்றாக அமைந்திருப்பதாகவும் பாராட்டியதாகத் தெரிகிறது. படம் நன்றாக வந்திருப்பதாலேயே சரியான நேரம் பார்த்து வெளியிடவேண்டும் என்று வெளியீட்டுத் தேதிகளை அலசி ஆராய்ந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close