Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாதவன் படம் என்னாச்சு?

பிரசாத் என்பவருடைய இயக்கத்தில் மாதவன் நடித்துக்கொண்டிருக்கும் படம் இறுதிச்சுற்று. சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் ஆகியோர் தயாரிக்கும் இந்தப்படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டுமொழிகளிலும் தயாராகிறது. இந்தப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்.

கடந்தஆண்டு ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இப்போது வரை படம் முழுமையடையவில்லை. குத்துச்சண்டைப்பயிற்சியாளராக மாதவன் நடித்திருக்கும் இந்தப்படம் பொருளதாரச் சிக்கலால் தாமதமாகிறது என்று சொல்லப்படுகிறது.

தெம்பான இரண்டு தயாரிப்பாளர்கள் இருக்கும்போது அதுதான் காரணம் என்பதையும் நம்பமுடியவில்லை. எப்படியிருந்தாலும் படம் தாமதமாகிக்கொண்டிருப்பது எதார்த்தம். இப்போது அதற்கு ஒரு முடிவு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தமிழில் பல படங்களை வாங்கி வெளியிட்டும் பல படங்களை நேரடியாகத் தயாரித்த யுடிவி நிறுவனம் யட்சன் படத்தோடு தற்காலிகமாக மூடப்படுவதாகச் சொல்லப்பட்டது.

அந்த நிறுவனம் இந்தப்படத்தை தமிழ், இந்தி ஆகிய இரண்டுமொழிகளிலும் வெளியிடும் உரிமையைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் விரைவில் ஒப்பந்தம் போடப்பட்டுவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

அவ்வாறு நடந்தால் மாதவன் பெரிதும் எதிர்பார்க்கும் அந்தப்படம் விரைவில் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close