Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’துளசி கொடுத்த மறக்க முடியாத பரிசு!’’ - அருண் விஜய் நெகிழ்ச்சி

ருண் விஜய்க்கு இன்று பிறந்த நாள்..!

பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னவுடன் மகிழ்ச்சியாக நன்றி சொன்னவர் இந்த வருஷம் என்னால மறக்க முடியாத பிறந்தநாள் என படு ஹேப்பி மூடில் இருந்தார்.

ஹேப்பி பர்த் டே... பிறந்தநாள் செலிபிரேஷன் எப்படிப் போகுது?

ஷூட்டிங் தான் பிளான். எங்கேயும் எப்போது சரவணன் டைரக்‌ஷன்ல சக்கரவியூகம் படம் போகுது. அப்பறம் ஒரு கன்னடப்படம். இந்த வருஷம் நிறைய வாழ்த்துகள், நிறைய நிகழ்ச்சிகள். இந்த வருஷமே செம ஸ்பெஷல் வருஷம். நிறைய ரிலீஸ். என்னை அறிந்தால் எனக்குக் குடுத்த பிரேக் அப் நான் வெயிட் பண்ண மொமெண்ட் அது. அப்பறம் புரூஸ் லீ, வா டீல் இந்த வருஷ இறுதியில ரிலீஸ் பண்ற பிளான்ல இருக்கோம். செம பாஸிட்டிவ் வருஷம் இது. நான் ஷூட்டிங்ல இருந்தாலும் ஃபேமிலி இங்க வந்துட்டாங்க.அதுவே சந்தோஷமா இருக்கு.

என்ன பிளான்?

எல்லா வருஷமும் உதவும் கரங்கள் அமைப்புல தான் நான் என்னோட பர்த் டேவ கொண்டாடுவேன். அவங்களோட சாப்பிட்டு, அங்கையே கேக் வெட்டி. அந்த குழந்தைங்களோட டைம் ஸ்பெண்ட் பண்றதே அலாதியான விஷயம். எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லருந்து அங்க தான் என்னோட பிறந்தநாள். இந்த வருஷம் நான் காலைல போக முடியல. ஆனாலும் அம்மா அங்க போயிட்டாங்க. நான் சாய்ங்காலம் போயி கலந்துப்பேன். கண்டிப்பா போயிடுவேன்.

மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு?

அந்த உதவும் கரங்கள்லதான் ஒரு பொண்ணு பேரு துளசி. அந்தப் பொண்ணு தான் ஒரு குட்டி நாய்க்குட்டி குடுத்தாங்க. என்னோட பிறந்தநாள் அன்னிக்குதான் அந்த பப்பியும் பிறந்துச்சு. அந்த குட்டி இப்பவும் என் வீட்ல இருக்கு பேரு மைக்கி. செம கியூட். என்னால மறக்கவே முடியாத பரிசு. அந்த பொண்ணு துளசியும் தான்.

- ஷாலினி நியூட்டன் -

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close