Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமுத்திரக்கனியின் அடுத்தபடம்

2012 இல் அன்பழகன் இயக்கத்தில் வெளியான படம் சாட்டை. யுவன் மஹிமாநம்பியார் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்திருந்த அந்தப்படத்தில் பள்ளி ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்தார் சமுத்திரக்கனி. அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அப்படிப்பட்ட படங்களின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் தற்போதைய வழக்கப்படி சாட்டை படத்தின் இரண்டாம்பாகத்தையும் எடுத்துக்கொண்டிருக்கிறார்களாம். அதை சமுத்திரக்கனி இயக்குகிறாராம். படத்தைத் தயாரிப்பதும் அவர்தான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்திலும் சமுத்திரக்கனிக்கு முக்கியவேடம் என்றும் அவரோடு தம்பிராமய்யா மற்றும் வேலராமமூர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்களாம். இவர்கள் மூவரையும் மையப்படுத்திய இந்தக்கதையில் காக்காமுட்டை சிறுவனுக்கு முக்கியவேடம் இருக்கிறதாம்.

காக்காமுட்டைக்குப் பிறகு அச்சிறுவன் நடிக்கும் படம் இதுதான் என்று சொல்கிறார்கள். அதனால் அச்சிறுவன் நடிப்பதை ரகசியமாக வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறதாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்