Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செய்த தவறைச் சரிசெய்கிறாரா விஜய்?

விஜய்யின் அறுபதாவது படத்தை பரதன் இயக்கப்போகிறார் என்று செய்தி வந்ததிலிருந்து அதுபற்றிப் பலவிதமான பேச்சுகளும் வரத்தொடங்கிவிட்டன. ஏற்கெனவே விஜய்யை வைத்து அழகியதமிழ்மகன் என்ற தோல்விப்படத்தைக் கொடுத்தவருக்கே அடுத்தபடத்தைக் கொடுத்திருக்கிறார்.

இது விஜய்க்குப் பலவீனம் என்று சிலரும், வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஒருவருடைய திறமை மீது நம்பிக்கை வைத்த விஜய் பாராட்டுக்குரியவர் என்றும் இரண்டுவிதமான கருத்துகள் பரிமாறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே விஜய் ஏற்கெனவே செய்த தவறை இப்போது சரி செய்துகொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் மிகப்பெரிய வெற்றிப்படமான கில்லி படத்துக்கு வசனம் எழுதியிருந்தார் பரதன். அப்போது தாமே ஒரு படத்தை இயக்குவதற்காக ஒரு கதையை விஜய்யிடம் சொன்னாராம் பரதன்.

விஜய் அந்தக்கதையை வேண்டாமென்று சொல்லிவிட்டு வேறொருவரின் கதையை எடுத்துக்கொண்டு நீங்கள் இயக்குநராக மட்டும் இருங்கள் என்று சொல்லி எடுக்கப்பட்ட படம்தான் அழகியதமிழ்மகன். விஜய் சொன்னதைக் கேட்டதால் பரதனுக்கு அடுத்த படம் கிடைப்பதே தாமதமானது. மறுபடி படங்களுக்கு வசனம் எழுதினார்.

மலையாளத்தில் வெற்றிபெற்ற காக்டெயில் படத்தைத் தமிழில் அதிதி என்கிற பெயரில் இயக்கினார். இப்போதும் பரதன் சொன்ன கதை பிடித்து கதையை மட்டும் வைத்துக்கொண்டு வேறு இயக்குநரை வைத்து படத்தை எடுக்கலாம் என்றுதான் முதலில் திட்டமிட்டிருக்கிறார்கள். வேறு யாரும் அதற்குப்பொருத்தமாக அமையாத நேரத்தில், பரதனே இயக்கட்டும் என்று விஜய்யே சொன்னதாகச் சொல்லப்படுகிறது.

பரதன் சொன்ன கதையை வேண்டாமென்று சொன்னதன் மூலம் நடந்த தவறைச் சரிசெய்யவே இப்போது பரதன் கதையை பரதனே இயக்கட்டும் என்று விஜய் முடிவுசெய்திருப்பார் என்றும் பேச்சுகள் இருக்கின்றன. ஒரு படம் பற்றி ஒரு செய்திதான் அதிகாரப்பூர்வமாக வந்தது. அதன்பின் இதுபோல் நிறையச் செய்திகள் தாமாகவே முளைத்துவருகின்றன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close