Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆனந்தியைப் புலம்ப விட்ட இயக்குநர்!

சமீபத்தில் வெளியான த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் நாயகியாக நடித்த ஆனந்தி மனம் விட்டுப் பேசியுள்ளார். இதற்கு முன் பொறியாளன், கயல், சண்டிவீரன் என குடும்பப்பாக்கான படங்களில் நடித்தவரிடம் இந்தப் படத்தினால்,  அடல்ட் படத்தில் ஏன் நடித்தீர்கள் என பலரும் கேட்கும்படி மாறியுள்ளது.

இதற்கு சமீபத்திய சந்திப்பில் அவரே மனம் திறந்து பதிலளித்துள்ளார், ஆதிக் ரவிசந்திரன் என்னிடம் கதை கூறும் போது அழகான டீனேஜ் காதல் கதை என்றே நினைத்து நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கும் போது தான் எனக்கே தெரிந்தது படம் அடல்ட் பாணியில் சென்றுள்ளது என்பது.

நான் தெலுங்கு டப்பிங் ரிலீஸ் இசை வெளியீட்டில் கூட கலந்துகொண்டதற்குக் காரணம் படம் நல்ல வசூல். மேலும் படத்தின் டீனேஜ் காதல் காட்சிகள் மிகவும் அழகாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேல் என்னை ஜி.வி.பிரகாஷ் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டதால் தான் கலந்துகொண்டேன். மீண்டும் ஆதிக் ரவிசந்திரன் படத்தில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். எனக்கு அடல்ட் காமெடி படங்கள் பிடிக்காது எனக் கூறியுள்ளார் ஆனந்தி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close